அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புடன் மாணவி அனுமதி

சேந்தமங்கலம், நவ.2:  தமிழகம்  முழுவதும் தற்போது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி  வருகிறது. சேந்தமங்கலம் அடுத்துள்ள  கொண்டம்பட்டிமேடு பகுதியை சோந்த கல் உடைக்கும் தொழிலாளி அழகேசன் மகள் பிரியா(15). முத்துகாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு  படித்து வருகிறார். கடந்த 4 நாட்களாக பிரியாவுக்கு காய்ச்சல் இருந்து  வந்தது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும்  காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அவரை, நேற்று சேந்தமங்கலம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ரத்த பரிசோதனை செய்ததில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  பிரியாவை சிறப்பு வார்டில் வைத்து, தலைமை மருத்துவர் சாந்தி கருணாநிதி  தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

Related Stories: