லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை

* இடைத்தரகர்கள் சுற்றுச்சுவர் ஏறிகுதித்து தப்பியோட்டம் * ₹24.85 லட்சம் பறிமுதல்

வேலூர் ஆவின், தி,மலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்

வேலூர், நவ.2:வேலூர் ஆவின, தி.மலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் ₹24.85 பறிமுதல் செய்யப்பட்டது.வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி சரவணகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், பி.விஜயலட்சுமி, எஸ்.விஜயலட்சுமி கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலூர் ஆவின் அலுவலகத்தில் நேற்று மாலை 3 மணியளவில் அதிரடியாக நுழைந்தனர்.அப்போது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற ஆவின் பொதுமேலாளர்(பொறுப்பு) முரளிபிரசாத்தை மடக்கி பிடித்து அவரது காரை சோதனையிட்டு ₹11 லட்சத்தை கைப்பற்றினர். தொடர்ந்து அங்குள்ள கார்டனில் பேப்பரில் சுற்றி வீசப்பட்டிருந்த ₹1 லட்சத்தையும் கைப்பற்றினர். தொழில்நுட்ப பணியாளர் சேகர் என்பவரிடம் இருந்து ₹2.85 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். ஆவின் அலுவலகத்தில் இருந்து மொத்தம் ₹14.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து பொதுமேலாளர் முரளிபிரசாத்திடம் நடத்திய தீவிர விசாரணையில், வேலூர் ஆவின் அலுவலகத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள் 11 பேருக்கு கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை ₹90 லட்சத்தை வழங்க அரசு உத்தரவிட்டது. அதில் முதல்கட்டமாக அரசிடம் இருந்து வந்த ₹44 லட்சம் நிலுவைத் தொகையை வழங்க தொழில்நுட்ப பணியாளர்களிடம் 30 முதல் 35 சதவீதம் வரை லஞ்சம் கேட்டதாக தெரிய வந்தது. அதன்படி, கடந்த 30ம் தேதி பணியாளர்களின் வங்கி கணக்கில் நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒப்புக் கொண்டபடி 10 பணியாளர்களும் ₹11 லட்சம் பணத்ைத நேற்று பொது மேலாளர்(பொறுப்பு) கொடுத்தது தெரியவந்தது..தொடர்ந்து ஆவின் பொதுமேலாளர்(பொறுப்பு) முரளிபிரசாத்திடமும், தொழில்நுட்ப பணியாளர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆவின் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை: திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக கிடைத்த புகாரை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சரவணகுமார், இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், லைசென்ஸ் எடுக்க வந்தவர்களை போல இருசக்கர வாகனங்களில் ஆர்டிஓ அலுவலகத்துக்கு வந்தனர்.

தொடர்ந்து, அலுவலக நுழைவு வாயிலை இழுத்து மூடிவிட்டு, அதிரடியாக அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்களை அடையாளம் கண்டு கொண்ட இடைத்தரகர்கள், அலறியடித்துக்கொண்டு சுற்றுச்சுவர் மீது ஏறிகுதித்து தப்பியோடினர். அப்போது இரண்டு பேரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர்.மேலும், புகைப்படம் எடுக்கும் இடம், லைசன்ஸ் பெற பதிவு கட்டணம் செலுத்தும் இடங்களில் இருந்த 4 இடைத்தரகர்களையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், வட்டார போக்குவரத்து அலுவலரின் வாகனம், அதிகாரிகளின் அறைகள், பதிவேடுகள் வைக்கும் பீரோக்கள் உள்ளிட்ட இடங்களில், பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் சோதனை நடத்தினர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து பைக்குகளையும் சோதனை நடத்தினர்.மதியம் 1 மணி அளவில் நுழைந்த விஜிலன்ஸ் போலீசார் இரவு 8 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ₹10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் மீதுவழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: