பன்றிக் காய்ச்சலை தடுக்க சாப்பிடும் முன் கை கழுவ வேண்டும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்

அரக்கோணம், நவ. 2: பன்றிக்காய்ச்சலை தடுக்க சாப்பிடும் முன் கை கழுவ வேண்டும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.வேலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. அரக்கோணம், வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் சிறுவன் உட்பட 5க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிசிக்சை பெற்று வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு காய்ச்சலை விட பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக சுகாதார துறையினர் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த பல்ேவறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.வேலூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, காய்ச்சல் உள்ளவர்கள் குறித்து நாள்தோறும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று கிராமப்புறங்களில் காய்ச்சல் காரணமாக பலர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைப் பெற குவிந்து வருகின்றனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுரேஷ் கூறுகையில், ‘டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுக்க அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மருந்து, மாத்திரைகள் மற்றும் நிலவேம்பு கசாயம் தேவையான அளவிற்கு தயாராக உள்ளது.எனவே பொதுமக்கள் யாரேனும் காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் உணவுகளை உண்பதற்கு முன்னும், பின்னும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதுபோன்று செயல்பட்டால் 80 சதவீதம் பன்றிக் காய்ச்சல் வருவது தடுக்கப்படும்.எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சோப்பு போட்டு கழுவிய பின்பு உணவுகளை உண்ண சொல்ல வேண்டும்’ என்றார்.

Related Stories: