பண்ருட்டியில் சரக்கு வாகனங்கள் நிறுத்த போலீசார் கட்டுப்பாடு

பண்ருட்டி, நவ. 2: பண்ருட்டி காவல் உட்கோட்டம் சார்பில் சரக்கு வாகனங்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதில், பண்ருட்டி நகரத்தில் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை, மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மட்டுமே பண்ருட்டி மார்கெட்டிற்கு வரும் வாகனங்களில் உள்ள பொருட்களை இறக்கிவிட்டு வெளியேற வேண்டும். தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகளை நிறுத்தக்கூடாது.அரசூர், மடப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பண்ருட்டி வரும்போது மிதமான வேகத்தில் வர வேண்டும். அதிக பாரம், அதிக உயரத்தில் சரக்குகள் ஏற்றி நகர பகுதயில் வரகூடாது. பண்ருட்டி வரும் அனைத்து வாகனங்களையும் உரிய ஆவணங்கள் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் பொருட்களை ஏற்றி வரும்போது பயணிகளை ஏற்றிவரகூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: