ஏற்காட்டில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஏற்காடு, நவ.1: ஏற்காட்டில் கிராம உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்ககத்தினர் நேற்று முதல் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஏற்காடு தாலுகா அலுவலக வாயிலில் கிராம உதவியாளர்கள், சங்க வட்டார தலைவர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ₹15,700 வழங்க வேண்டும், காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியம் மற்றும் போனஸ் ₹3,500 வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க செயலாளர் ராமர், பொருளாளர் முரளி, மோகன், மாதையன், செல்வம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சார்லஸ் நன்றி கூறினார்.

Related Stories: