3 ஆண்டாக தலைமறைவாக இருந்த வழிப்பறி ஆசாமி கைது

சேலம், நவ.1:  சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் மெய்கண்ணன் என்கிற பூபதி(38). இவர் மீது சேலம் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில், 10க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் உள்ளது. சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில், கோர்ட்டில் ஆஜராகாததால் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அவர் 3வருடமாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் பழைய குற்ற வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய, சேலம் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.   நேற்று முன்தினம், பேர்லேண்ட்ஸ் பகுதியில் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருந்த பூபதி என்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  ற்கும் திருடர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் வங்கி தொடர்பான ரகசிய நம்பரை செல்போன் வழியாக தெரிவிக்க வேண்டாம். பேங்க் ஏடிஎம்மில் அறிமுகம் இல்லாதவர்களின் உதவியை நாட வேண்டாம். இவ்வாறு போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதை துண்டு பிரசுரமாகவும் அச்சடித்து விநியோகித்து வருகின்றனர். சேலம் டவுன் பகுதியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ரேடியோ கட்டப்பட்டு, ஒலிபெருக்கி மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தவிர, கன்னிகாபரமேஸ்வரி கோயில், ராஜகணபதி கோயில் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: