பெரம்பலூர் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பெரம்பலூர், நவ.1:  பெரம்ப லூர் வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பாக, மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, மூளைக்காய்ச்சல் பற்றிய 2 நாள் விழிப்புணர்வுப் பயிற்சி நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்ட, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டம், பெரம்பலூர் வட் டார வளமையத்திற்குட்பட்ட மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வு பற்றிய 2 நாள் பயிற்சிகள் நேற்று (31ம் தேதி) துவங்கி இன்று (1ம் தேதி) பெரம்பலூர் வட்டார வளமையத்தில் நடக்கிறது. இதற்கான பயிற்சியை நேற்று பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருளரங்கன் தொடங்கி வைத்து, ஆலோசனைகள் வழங்கினார். உதவி மாவட்டத் திட்ட அலுவலர் ராஜா முன்னிலை வகித்து, மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கினார். இதில் சிறப்பு கருத்தா ளர்களாக மாவட்ட மருத்துவ பயிற்சி அலுவலர் சிவா, மூளைக் காய்ச்சல் பரவும்விதம், தடுக்கும் முறைகள், சிகிச்சை பெறுதல், கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல் மூலம் பயிற்சி அளித்தார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, அரசின் நலத்திட்ட உத விகள் மற்றும் அதனைப்பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். சிறப்பாசிரியர்கள் கருத்தாளர்களாக கலந்துகொண்டு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உணவு முறைகள், அவர்களைப் பராமரிப்பது, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான தொழில்பயிற்சியுடன் கூடிய வாழ்வாதாரம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியளித்தனர்.  இப்பயிற்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், பாரதிதாசன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராமதாஸ், செந்தாமரைச்செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி, ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பெற்றோர்களுக்குத் தேவையான ஆலோசனை வழங்கினர். இப்பயிற்சியில் மாற்றுத்திறன் கொண்ட பெற்றோர்கள் 35 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Related Stories: