புதிய துணைமின்நிலையம் திறப்பு

வத்திராயிருப்பு, நவ. 1: வத்திராயிருப்பு அருகே, புதிய துணைமின்நிலையம் திறக்கப்பட்டு, மின்விநியோகம் தொடங்கியது. வத்திராயிருப்பு அருகே உள்ள முத்துகுமாரபுரத்தில், ரூ.6 கோடி22 லட்சத்தில்  புதிய துணைமின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஆயர்தர்மம், துலுக்கப்பட்டி, முத்துகுமாரபுரம், சுந்தரபாண்டியம், காடனேரி, கோட்டையூர், தம்பிபட்டி, மாவூற்று, இந்தைக்குளம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட ஊர்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. புதிய துணை மின்நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இயக்கி தொடங்கி வைத்தார். திருவில்லிப்புத்துர் எம்எல்எ சந்திரபிரபா முத்தையா குத்துவிளக்கு ஏற்றி, மின்விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ‘முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, மின்சார மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா, செயற்பொறியாளர் சுடலை ஆடும்பெருமாள், உதவி செயற்பொறியாளர் (பொ) ஆதிமூலம், வத்திராயிருப்பு உதவி செய்ற்பொறியாளர் முருகேசன், உதவி மின்பொறியாளர்கள் கல்யாணி பாண்டியன், கற்பகச்செல்வி, குருநாதன், களிதீர்தாவன், அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ். மகாராஜபுரம் தொடக்க வேளண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: