பொதுமக்களுக்கு வழங்க 2 டன் நிலவேம்பு இருப்பு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில்

வேலூர், நவ.1:வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்க 2 டன் நிலவேம்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஞானமணி தெரிவித்தார்.வேலூர் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் சிறந்த மருந்தாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக, வேலூர் மாவட்டத்தில் 2 டன் நிலவேம்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஞானமணி கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் சித்த மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மொத்தம் 60 இடங்களில் இயங்கி வருகின்றன. இங்கு வந்து செல்லும், பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் முகாம்கள் நடத்தப்படும். இதற்காக, வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 2 டன் நிலவேம்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.3 மணி நேரம் தான் வீரியம் நிலவேம்பு கசாயத்தை காய்ச்சிய 3 மணி நேரம் மட்டுமே அதன் வீரியம் இருக்கும். அதற்கடுத்து, கசாயம் பயன்படுத்தினாலும் பயனில்லை. எனவே, தேவையான அளவில் கசாயம் காய்ச்சி பயன்படுத்தும்படி சித்த மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர். 3 மணிநேரத்துக்கு பிறகு மீதமாகும் கசாயத்தை மீண்டும் காய்ச்சி குடிக்க வேண்டாம். ஒவ்வொரு முறையும் புதிதாக கசாயம் காய்ச்சி குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: