அரியலூரில் முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்க சிறப்பு கூட்டம்

அரியலூர்,அக்,30: அரியலூரில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல சங்கம் சார்பில் சிறப்பு கூட்டம் சென்மேரிஸ் திருமண மஹாலில் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் மேஜர் காசிமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர், மாவட்ட பொருளாளர் பிச்சை, மாவட்ட செயலாளர் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் ஒன்றியத்தின் கணக்குகளை மாவட்ட பொருளாளரிடம் ஒப்படைத்தல், 2018-19ம் ஆண்டுக்கான சந்தா தொகையை அனைத்து உறுப்பினர்களிடமும் வசூல் செய்தல்,

புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும்  புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் ஆகிய மன்ற பொருட்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் மகாராஜன், மாநில பொதுச்செயலாளர் மணி, மாநில பொருளாளர் சீனிவாசன், மாநில துணை தலைவர் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அனைத்து மாவட்ட தலைநகரிங்களிலும் ராணுவீரார்களுக்கான கேன்டின் அமைத்து தரவேண்டும், மிலிட்டரி மருத்துவ வசதிகள் செய்துதர வேண்டும் என்று கோரிக்கை வைத்து சிறப்புரையாற்றினர்.

Related Stories: