ஜெயங்கொண்டத்தில் தாலுக்கா அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஜெயங்கொண்டம், அக்.30: ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் பரிதாபாணு தலைமை வகித்தார். வெத்தியார்வெட்டு ரத்தினவேல் புதிய சிலிண்டர் வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை, இலவச எரிவாயு அடுப்பு பெறுவது எப்படி எனவும் கேட்டார். விவசாயிகள் சங்க பிரதிநிதி பாண்டியன் கிராமங்களில் வீடுவீடாக சென்று சிலிண்டர் வழங்குவது இல்லை. சுமார்ட் கார்டில் போட்டோ பெயர் மாறியுள்ளதால் பலவித ஆவணங்களுக்கு அடையாள அட்டையாக வழங்க முடியவில்லை என்றனர். இதற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கூறியதாவது: சுமார்ட் கார்டு குழப்பங்கள் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் சரிசெய்யப்பட்டு வருகிறது.

மேலும் அதிக அளவில் மாறுதல் இருக்கும் கிராமங்களில் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இலவச அடுப்பு, இலவச எரிவாயு பெறுவதற்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும். ஏஜென்சி உள்ள ஊர்களில் சிலிண்டர் 5கி.மிக்குள் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி அதற்கு மேல் எடுத்து செல்வதற்கு கண்டிப்பாக கட்டணம் வழங்க வேண்டும் எனக் கூறினார். கூட்டத்தில் அமராவதி எரிவாயு சிறப்பங்காடி மேலாளர் வாசுகி, மணகெதி ஆதித்யா ஏஜென்சி அலுவலர் சூர்யா, ஜெயங்கொண்டம் தனம் கேஸ் ஏஜென்சி அலுவலர் செல்லபாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தவேல் வரவேற்றார். முடிவில் வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: