சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,அக்.30: சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரியும், உள்ளாட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்த கோரியும், அரியலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வரி உயர்வோடு, குடிநீர் கட்டணம் குடிநீர் இணைப்பு கட்டணம் பெயர் மாற்றம் பிறப்பு இறப்பு சான்றிதழ் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ள வரியினை நகராட்சி ஆணையர்கள் தன்னிச்சையாக தீர்மானம் போட்டு பல மடங்கு வரை உயர்ந்துள்ள நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், அரசு விதித்துள்ள சொத்துவரி உயர்த்தியும், உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கும் எடப்பாடி அரசைக் கண்டித்தும் கண்டன் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: