விதைநெல் கூடுதல் விலைக்கு விற்பனை விவசாயிகள் குற்றச்சாட்டு

அரியலூர்,அக்,26: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள விவசாய பிரச்னைகளை கலெக்டர் விஜயலெட்சுமியிடம் கோரிக்கை மனுவாக அளித்தனர்.

இந்திய விவசாய சங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் ராஜேந்திரன் அளித்த மனுவில், மானாவாரி பயிரை நம்பி இருக்கக்கூடிய இந்த மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சோளம் அனைத்தும் பூச்சி தாக்கி விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க கூடிய நிலை உள்ளது. வேளாண்மை துறையின் மூலம் சோளம் சாகுபடியால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

விதை நெல்லை அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விவசாயிகளிடம் விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது அதனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். டான்பெட்கோ மூலம் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று போர்வெல் அமைத்து உள்ள விவசாயிகளுக்கு ஏறத்தாழ ஐந்தாண்டு காலமாக மின் இணைப்பு வழங்கப்படாமல் அவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நெருக்கடியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் அப்படியே இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், கொள்முதல் செய்வதற்கான வசதி இல்லாமலும், கொள்முதல் செய்வதற்கு சாக்கு  கிடைக்காமலும் , நெல்லை வழங்கிய விவசாயிகளுக்கு பணம் கிடைக்காமலும் விவசாயிகள் அவதி படுகிறார்கள். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

காவேரி டெல்டா பாசன விவசாய சங்ககளின் கூட்டமைப்பின் அரியலூர் மாவட்ட தலைவர் தூத்தூர்.தங்க.தர்மராஜன் அளித்த கோரிக்கை மனுவில், கொள்ளிடத்தில் மேலனைமுதல் கீழனை வரை தலா 10கி.மீ 1வீதம்  தடுப்பணை கட்ட வேண்டும். புள்ளம்பாடி வாய்காலில் கடை கோடியில் உள்ள தூத்தூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. வரத்து வாய்காலை குடிமறாமத்து பணியில் தூர்வாரி தண்ணீர்வர சீர்செய்ய வேண்டும். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு இலவசம் பஸ் பாஸ் வழங்கவில்லை உடனே பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

Related Stories: