எருத்துக்காரன்பட்டி பஞ்சாயத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீரால் டெங்கு அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரியலூர்,அக்,25: எருத்துக்காரன்பட்டி பஞ்சாயத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீரால் டெங்கு அபாயம் உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜெ.ஜெயலலிதா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் தற்போது புதிதாக அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இக்கட்டிடத்தில் இருந்து வெளிவரும் சிமெள்ட் கலவையுடன் சேர்ந்து வரும் கழிவுநீர் அப்பகுதி குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இப்பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம்  சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: