தமிழக ஆசிரியர் கூட்டணியின் 36வது ஆண்டு துவக்க விழா

அரியலூர்,அக்,25: அரியலூர் தமிழக ஆசிரியர் கூட்டணியின் 36வது ஆண்டு துவக்கவிழா அரியலூர் மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் இயக்க நிறுவனரும், அகில இந்திய  துவக்கப்பள்ளி இயக்கங்களின் பொதுச்செயலாளர் அண்ணாமலை இயக்க கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்த பேசியபோது, தமிழகத்தில் முதன்முதலில் நான்கு மாவட்டங்களில் துவங்கப்பட்ட இந்த இயக்கமானது. தற்போது 30 மாவட்டங்களில் விரிவடைந்து வளர்ச்சி அடைந்துள்ளது தமிழக ஆசிரியர் கூட்டணி வழுபெற்றுள்ளது என்று கூறினார்.

இதனையடுத்து  இவ்விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் நம்பிராஜ் கலந்து கொண்டு இயக்கம் வளர்ச்சி பற்றிய விளக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி மாவட்ட பொறுப்பாளர்களும், வட்டார பொறுப்பாளர்களும், இயக்க உறுப்பினர்களும், அரியலூர் கல்வி மாவட்ட செயலாளர் கருணாநிதி, செந்துரை கல்வி மாவட்ட செயலாளர் சந்திரன், உடையார்பாளையம் கல்வி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான தமிழக ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Related Stories: