சர்வதேச அறிவியல் மாநாடு தூத்துக்குடி விஞ்ஞானிக்கு விருது

தூத்துக்குடி, அக்.17: லக்னோவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மாநாட்டில் தூத்துக்குடி விஞ்ஞானிக்கு விருது வழங்கப்பட்டது.தூத்துக்குடியை சேர்ந்த விஞ்ஞானி முருகன் கடந்த 2006ம் ஆண்டு வாழை தண்டிலிருந்து பட்டுநூல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். மத்திய அரசின் பல்வேறு உதவியுடன் தனது கண்டுபிடிப்புகளை தொடர்ந்து வருகிறார். அதனடிப்படையில் வாழை தண்டிலிருந்து உணவை செரிக்கவைக்கும் நார்சத்து உணவு மற்றும் வாழை தண்டு சர்பத் ஆகியவற்றையும் தற்போது வாழை தண்டிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் முறையையும் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த 3 நாள் இந்திய சர்வதேச அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள முருகனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இந்த மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்சவர்தன் முன்னிலை வகித்தார். இதில் வாழை தண்டு சர்பத் கண்டுபிடிப்புக்காக தூத்துக்குடி விஞ்ஞானி முருகனுக்கு மத்திய உயர் தொழில்நுட்ப செயலாளர் ரேனுசவ்ரப் விருது மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கி பாராட்டினார்.

Related Stories: