சுரண்டை புத்தக திருவிழாவில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

சுரண்டை, அக். 17:  சுரண்டை புத்தக திருவிழா சார்பில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியை கோதை மாரியப்பன், சப்-கலெக்டர் (பயிற்சி)சுகபுத்ரா தொடங்கி வைத்தனர். கீழச்சுரண்டை பொதுநல மன்றம் மற்றும் சமூக நலச்சங்கங்கள் இணைந்து நடத்திய 2வது புத்தக திருவிழா சுரண்டை காமராஜர் புதிய தினசரி மார்க்கெட் வளாகத்தில் கடந்த 6ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடந்தது. புத்தக கண்காட்சியில் 50 அரங்குகளில் 7 லட்சத்துக்கும்  அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றன. சுரண்டை சுற்றுவட்டார பள்ளிகள் கலந்து கொண்ட வினாடி வினா, பேச்சு போட்டி, கதை, கட்டுரை, கவிதை போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நெகிழி இல்லா இந்தியா என்ற தலைப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை கோதை குரூப்ஸ் நிறுவனர் கோதை மாரியப்பன், நெல்லை சப்-கலெக்டர் (பயிற்சி) சுகபுத்ரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்லஸ், சுரண்டை அரிமா பொருளாளர் சண்முகவேல், சாதனா வித்யாலயா பள்ளி ராஜேஸ், அறுமுகா ஐஏஎஸ் அகாடமி சண்முகவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: