நாங்குநேரி அரசு பள்ளி மாணவிகள் பாதிப்பு

நாங்குநேரி, அக். 17:  நாங்குநேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடந்தாண்டு தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 74 மாணவிகள் மேல்நிலை வகுப்புகளில் படித்து வருகின்றனர். இதில் பிளஸ்1 மாணவிகள் 47 பேர். பொதுத் தேர்வை நோக்கியிருக்கும் இவர்களுக்கு, இதுவரை  2ம் பருவ பாட நூல்கள் விநியோகிக்கப்படவில்லை. இதனால் தேர்வை எப்படி நேர்கொள்வது என மாணவிகள் குழப்பத்தில் உள்ளனர். புதிய பாடத்திட்டம் என்பதால் கடந்த ஆண்டின் பாட நூல்களையும் பின்பற்ற முடியாத நிலை உள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து வகுப்புகள் துவங்கி 15 நாட்களுக்கும் மேலாகிறது. 11ம் வகுப்பிற்கு பாட நூல் வராததால் பெரும்பாலான வகுப்புகள் செயல்பாடற்ற நிலையில் இருப்பதாக மாணவிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான அரசு பள்ளிகளின் இதே நிலை நீடிப்பதாக கல்வியாளர் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பொதுத் தேர்வுக்கு தயாராகும் பிளஸ்1 மாணவிகளுக்கு உடனே புதிய பாடப் புத்தங்களை விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: