சாலையோரம் குவிக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு

ராஜபாளையம்  அக். 17: ராஜபாளையம் நகர் மற்றும் தாலுகாவில் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் போதிய அடிப்படை வசதியில்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக சுகாதாரப் பணிகளும் முறையாக நடைபெறவில்லை. இதனால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ராஜபாளையம் நகராட்சி எல்லையை அடுத்த மதுரை, தென்காசி சாலையோரங்களில், குப்பைகளையும் கட்டிட கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதில் கொசுக்கள் உருவாகி சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் மூக்கைப் பிடித்தபடி செல்கின்றனர். இந்த குப்பைகளை அகற்ற நகராட்சியோ, ஊராட்சி நிர்வாகங்களோ நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது மழை பெய்து வருவதால், மீன்டும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையத்தில் குடியிருப்பு அருகேயே மயானம் அமைந்துள்ளது. இதிலிருந்து வரும் புகையாலும், துர்நாற்றத்தாலும் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ராஜபாளையம் தாலுகாவில் அதிகமாக இறந்தனர். எனவே, ராஜபாளையம் மற்றும் தாலுகா பகுதியில் குவிக்கப்படும் குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: