சேந்தமங்கலம் அரசு பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

சேந்தமங்கலம், அக்.17:சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசுகையில், ‘பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்கக்கூடாது. அதிக விடுமுறை எடுப்பதை தவிர்த்து, சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள் அவசியம் கலந்து கொள்ளவேண்டும். இதற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்,’ என்றார். கூட்டத்தில் துணை தலைவர் செல்வம், வள மைய மேற்பார்வையாளர் பாலுசாமி, உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, தொழில்கல்வி ஆசிரியர் தலைவர் தனபால், உறுப்பினர்கள் கந்தசாமி, வேலுசாமி, வெற்றிவேல், மகேந்திரன், ராஜதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: