வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.13 லட்சம், 254 கிராம் தங்கம்

தேனி, அக். 17: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயிலில் நிரந்தர உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ரூ.13 லட்சத்து 34 ஆயிரத்து 662, தங்கம் 254 கிராம் மற்றும் வெள்ளி 201 கிராம் இருந்தது.தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன்கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் எட்டு நாட்கள் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் தேனி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்வர்.  சித்திரை திருவிழாவின்போது, கோயில் எப்போதும் உள்ள நிரந்தர உண்டியல்களோடு தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டு திருவிழா முடிந்தபிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, சித்திரைத் திருவிழாவிற்கான உண்டியல்கள் எண்ணப்பட்டன.

இதையடுத்து, நேற்று கோயிலில் எப்போதும் உள்ள நிரந்தர 10 உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. இதற்கு இந்து சமய அறநிலையத் துறை திண்டுக்கல் மண்டல உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையிலும், கோயில் செயல்அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம், நகை எண்ணப்பட்டன.

இதில் வீரபாண்டி சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரி ஆசிரியை மாணவியர் உண்டியல்களில் இருந்த பணம், நகைகளை எண்ணினர். இதில் 10 உண்டியல்கள் எண்ணப்பட்டதில் மொத்தம் ரூ.13 லட்சத்து 34 ஆயிரத்து 662, தங்கம் 254 கிராம், வெள்ளி 201 கிராம் ஆகியவை இருந்தன. உண்டியல் எண்ணுவதற்கான ஏற்பாடுகளை கோயில் மேலாளர் பாலசுப்பிரமணி செய்திருந்தார்.

Related Stories: