குடியிருப்பு பகுதியில் குரங்கு தொல்ைலயால் மக்கள் அவதி

அரூர், அக்.17: அரூர் பகுதியில் குரங்கு தொல்லை அதிகரிப்பால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூர் திருவிகநகர், பெரியார் நகர், தில்லை நகர், பாட்சாபேட்டை மற்றும் பரசுராமன் தெரு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் புகுந்து வருவதால் மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். அவை வீட்டிற்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடி வருகிறது. மேலும், வீடுகளுக்கு செல்லும், மின்சார ஒயர், கேபிள்,

தொலைபேசி ஒயர்களை கடித்து துண்டித்து விடுகிறது. மரங்களில் இருக்கும் காய்களையும் சேதப்படுத்துகிறது. விரட்ட முற்படும் மக்களை குரங்குகள் கடிக்க வருவதால் அதன் அருகில் நெருங்குவதற்கே பலரும் அச்சப்படுகின்றனர். வனத்துறையினருக்கு பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் சுற்றும் குரங்களை கூண்டுகள் வைத்து பிடித்து, வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: