தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் தள்ளுவண்டி கடைகளை அகற்ற நகராட்சி கமிஷனரிடம் மனு

தர்மபுரி, அக்.17: தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் நகராட்சி கடைகள் முன் நிற்கும் தள்ளுவண்டி கடைளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடை வாடகை தாரர்கள் நகராட்சி கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட ராஜகோபால் கவுண்டர் பூங்கா முன்புள்ள நகராட்சி கடை வாடகைதாரர்கள் நேற்று தர்மபுரி நகராட்சி கமிஷனர்(பொ) கிருஷ்ணகுமாரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்தமனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி நகராட்சிக்கு சொந்தமான ராஜகோபால் பூங்கா எதிரே உள்ள கடை எண் 5ல் இருந்து 14 வரை உள்ள கடைகளில், பல வருடங்களாக வாடகைதாரர்களாக இருந்து வருகிறோம். எங்களது கடைகள் முன் சாலையில் தள்ளுவண்டிகள் வைத்து சுகாதாரமின்றி உணவு வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஏராளமான தள்ளுவண்டிகள் எங்களது கடைகளை மறைத்து நிறுத்துவதால், எங்களது கடையில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு மாதந்தோறும் வாடகை செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் தள்ளுவண்டி கடைகளால் பொதுமக்களுக்கு சிரமும், போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி கமிஷனர் இதில் தலையிட்டு எங்களது கடைகள் முன் நிறுத்தப்படும் தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: