அதிகாரிகள் சோதனை அதிக பயணிகளை ஏற்றிய 25 ஆட்டோ பறிமுதல்

தர்மபுரி, அக்.17: தர்மபுரியில் அதிக பயணிகளை ஏற்றிய 25ஆட்டோகளை, வட்டார போக்கு வரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் பயணிகளை அதிகளவில் ஏற்றி செல்வதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன்பேரில், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தர்மபுரி, பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை செய்து, அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் உழவர்சந்தை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக 10க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் சாலை விதிகளை கடைபிடிக்காத ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 7 ஆட்ேடாக்களை பறிமுதல் செய்தனர். கடந்த 3 நாட்களில், சாலை விதிகளை கடைபிடிக்காத 25 ஆட்டோகளை பறிமுதல் செய்துள்ளனர். 

Related Stories: