தமிழகத்தில் 1,178 வனக்காவலர் பணியிடங்கள் நிரப்ப முடிவு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு

நாகர்கோவில், அக்.17 :குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக  வனத்துறையில் காலியாக உள்ள 300 வனத்துறை அதிகாரி பணியிடங்கள், 726 வனத்துறை காவலர் பணியிடங்கள் மற்றும் 152 டிரைவிங் லைசென்சுடன் வனக்காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்கள் www.forests.tn.gov.in என்ற இணையதளம் மூலம்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த 15ம் தேதி முதல் விண்ணப்பம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 5.11.2018 ஆகும்.  முற்பட்ட வகுப்பினர் 1.7.2018  தேதியன்று 21 வயது முதல் 30 வயதிற்குள்ளும்,  பிற பிரிவினர் 21  வயது  முதல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.  

விண்ணப்பம் செய்ய தேவையான கல்வித்தகுதி மற்றும் கூடுதல் விபரங்களுக்கு www.forests.tn.gov.in  என்ற இணையதள முகவரியை பார்வையிடவும். மேலும் காவல் துறையில் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை)  202 பணியிடங்களும், உதவி சிறை அலுவலர் 30 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேற்கூறிய தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்யும் பொருட்டு நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப்பயிற்சி வகுப்புகள் 22.10.2018 முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பானது அலுவலக வேலை நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், சாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு, தேர்வுக்கு விண்ணப்பித்ததின் நகல் மற்றம் பாஸ்போர்ட்  சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாட்களில்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: