மார்த்தாண்டம் அருகே காயத்தால் துடித்த ஆதரவற்ற வாலிபருக்கு சிகிச்சை

மார்த்தாண்டம், அக்.17:   மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் பல நாட்களாக, சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் ஆதரவற்ற நிலையில் சுற்றிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வலது கையில் வெட்டு காயத்துடன் காணப்பட்டார். மேலும் அதற்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்ளாததால் புண்ணில் இருந்து சீழ் வடிந்த நிலையில் துர்நாற்றம் வீசியது.

இதனால் அந்த வாலிபர் வேதனையால் முனங்கியவாறு துடித்துக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜோஸ் என்பவர் மார்த்தாண்டம் சமூக சேவகர் ராஜகோபாலுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் சம்பவ இடம் வந்து ஊர் மக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மீட்டார். பின்னர் அவருக்கு உணவளித்து பசியாற்றினார். பின்னர் அவரது காயத்துக்கு முதலுதவி அளித்து, சிகை அலங்காரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சமூக ஆர்வலர்களின் மனிதநேயம் மிக்க செயலை அப்பகுதியினர் பாராட்டினர்

Related Stories: