நொகனூர் காட்டிற்கு 15 யானைகள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டை, அக்.16: கர்நாடக  மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்த 15 யானைகள் கடந்த ஒரு  வாரமாக ஓசூர் அருகே முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வந்தன. மாவட்ட  வன அலுவலர் தீபக்பில்ஜி அட்டகாசம் செய்யும் யானைகளை ஜவளகிரி  காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டார். நேற்று காலை ஓசூர் வனத்துறையினர் 15 யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள்  விரட்டினர். பேவநத்தம் காட்டில் சூரப்பன்குட்டையில் அந்த 15 யானைகளும் முகாமிட்டிருந்தன. தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை வனச்சரக  அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் சென்ற வனத்துறையினர்,

சூரப்பன்குட்டையில்  தஞ்சமடைந்துள்ள 15 யானைகளை நேற்று முன்தினம் மாலை தேன்கனிக்கோட்டை அருகே  நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டினர். நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ததால் யானைகளை  விரட்டுவதில் பின்னடைவு ஏற்பட்டது. இன்று நொகனூரில் இருந்து குள்ளட்டி காட்டிற்குள் விரட்ட  நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: