செந்தில் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, உணவு திருவிழா

தர்மபுரி, அக்.16: தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி, புத்தக கண்காட்சி, பாரம்பரிய உணவுத்திருவிழா மற்றும் வண்ணக்கண்காட்சி நேற்று தொடங்கியது. விழாவிற்கு செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி அறிவியல் கண்காட்சியையும், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி புத்தக கண்காட்சியையும், செந்தில் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி பாரம்பரிய உணவுத்திருவிழாவையும் தொடங்கி வைத்தனர். நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளி முதல்வர்கள் கிஷ்ணவேணி, பழனிசாமி,

மழலையர் பிரிவு பொறுப்பாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகள் 500 வகையும், 1000 தலைப்புகளில் புத்தகங்களும், 1000 வகையான பாரம்பரிய உணவு வகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சிகளை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். இக்கண்காட்சி இன்றும் நடக்கிறது.

Related Stories: