மொரப்பூர் பன்னியகுளத்தில் பழுதடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி

அரூர், அக்.16: மொரப்பூர் பன்னியகுளத்தில் பழுதடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மொரப்பூர் ஒன்றியம் பன்னியகுளம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த 2012-13ம் ஆண்டு ₹35 ஆயிரம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்தது.

தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 4தூண்களிலும், கான்கிரீட் உதிர்ந்து சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், உறுதித்தன்மை பாதிக்கப்பட்டு, இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்பு, இந்த தொட்டியை அகற்றிவிட்டு, புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: