அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு

விருதுநகர், அக். 16: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக, 2,580 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,740 வாக்குச் சீட்டு இயந்திரங்கள், 2,580 வாக்கு தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை பெங்களூரு பாரத் எலக்ட்ரிகல் நிறுவனத்திடம் இருந்து கொண்டு வரப்பட்டு, விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள ராமநாதபுரம் வேளாண்மை விற்பனை கூட கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி கடந்த அக்.1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

நேற்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டது. 125க்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு செய்து சரிபார்க்கப்பட்டது. இந்த வாக்குப்பதிவின்போது கலெக்டர் சிவஞானம், டிஆர்ஓ உதயகுமார், சிப்காட் நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜம்மாள், வட்டாட்சியர்கள் லோகநாதன், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: