சாத்தூரில் தீண்டாமை ஒழிப்பு மாவட்ட மாநாடு

சாத்தூர், அக். 16: சாத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தீண்டாமை ஒழிப்பு மூன்றாவது மாவட்ட மாநாடு நடந்தது. வரவேற்பு குழு தலைவர் விஸ்வநாத் வரவேற்றார். மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், வரவேற்பு குழு பொருளாளர் ஜானகிராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் பதிவு செய்யும் படிவங்களில் சாதியை பதிவுசெய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். சாத்தூர் ஒன்றியம் நடுச்சூரங்குடி கிராமத்தை சேர்ந்த 2 தலித் இளைஞர்கள் வேலைக்கு சென்றபோது மர்மமான முறையில் இறந்தனர்.

அது தொடர்பான விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். கம்மாய் சூரங்குடி, இருக்கன்குடி காலனி, சிவகாசி ஒன்றியம் போரார்பட்டி ஆகிய கிராமங்களில் தலித் மக்களுக்கு சுடுகாடு மற்றும் அதற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மதுரை பஸ்நிறுத்தத்திலிருந்து வடக்கு ரதவீதி வரை தீண்டாமை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

Related Stories: