சின்னமனூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்

சின்னமனூர், அக்.16: சின்னமனூர் அருகே புலிகுத்தியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சின்னமனூர் போடிநாயக்கனூர் மாநில நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் உரம், மருந்து, கூலி ஆட்கள் அழைத்து செல்லவும், விளைபொருட்களைக் கொண்டு வரும்போதும் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறில் சிக்கிக் கொள்கின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 3 வாரங்களாக நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோயில் பகுதியில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் விட்டிருப்பதால், சாலையை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் சில இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றாமல் பாரபட்சம் காட்டியிருப்பதால், இதற்கு துணையாக உள்ளனரா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. இதனால் பணி பாதியிலேயே நிற்கிறது. எனவே, புலிகுத்தியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: