நாட்டு வேலைக்கு டூரிஸ்ட் விசா கொடுத்து மோசடி

விழுப்புரம், அக். 16: சங்கரா

புரம் அருகே வெளிநாடு வேலைவாய்ப்புக்கு டூரிஸ்ட் விசாவை கொடுத்து பண மோசடி செய்ததாக எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் வினோத்(25). இவர் விழுப்புரம் எஸ்பியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பிஎஸ்சி பட்டம் முடித்துவிட்டு வெளிநாடு வேலைக்காக காந்திருந்தேன். அப்போது ஆன்லைனில் வெளிநாடு வேலைவாய்ப்பு என்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஹாஜா என்பவர் விளம்பரம் போட்டிருந்தார். அவரைத்தொடர்பு கொண்டு கேட்டபோது துபாய் நாட்டில் கணினி துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி ரூ.70 ஆயிரம் கேட்டார். அவர் கூறியதை நம்பி வங்கிக்

கணக்கில் இந்த பணத்தை செலுத்தினேன். பின்னர் வெளிநாடு செல்ல விசா எடுத்து கொடுத்தார். ஆனால் அவர் கொடுத்தது டூரிஸ்ட் விசா என்று தெரியவந்தது. டூரிஸ்ட் விசாவில் வேலைக்குச் செல்லக்கூடாது என்பதை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன். பின்னர் எனக்கு வேலை வேண்டாம், பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டேன்.

அப்போது ஹாஜா ரூ.45 ஆயிரம் கொடுப்பதாக கூறினார். நான் அதனை ஏற்கமறுத்து முழுபணத்தை கொடுக்க வேண்டும் என கூறினேன். ஆனால் பணத்தை தர

முடியாது என்றும், காவல்துறையிடம் சென்றால் உன்னை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிடுவேன் என மிரட்டினார். என்னைப்போல் பல இளைஞர்களிடம் இதேபோல் கைவரிசை

காட்டியுள்ளார்.

இவர் மீது ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளது தெரியவந்தது. எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: