ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

விழுப்புரம், அக். 16:  ஊதிய உயர்வு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பொருட்கள் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

500க்கும் அதிகமாக உள்ள குடும்ப அட்டை உள்ள கடைகளில் எடையாளர்கள் நியமிக்க வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்ைதயும் விவசாயி

களிடமிருந்தே கொள்முதல் செய்ய வேண்டும். பொதுவிநியோக திட்டத்திற்கென தனித்துறை அமைக்க வேண்டும்.

கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். நியாய

விலைக்கடைகளுக்கு வரும் பொருட்களை ஊழியர்கள் முன்பு சரியான முறையில் வழங்க வேண்டும். நியாய விலைக்கடை

களுக்கு சொந்த கட்டிடம், கழிப்பறை வசதி செய்துகொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலி

யுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். விழுப்புரம் மாவட்டத்தில் 2,800 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.  நேற்று நடந்த ஸ்டிரைக்கில் 60 சதவீதம் பேர் கலந்துகொண்டனர்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் கடைகள் மூடப்பட்டிருந்தன. நகரப்பகுதியில் மட்டும் சில கடைகள் வழக்கம்போல் இயங்கியது. 1,800 கடைகள் மூடப்பட்டிருந்த

தால் பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Related Stories: