அரசு பள்ளி மாணவர்களிடமிருந்து திட்ட அறிக்கைகள் வரவேற்பு

புதுச்சேரி, அக். 16: புதுச்சேரி பள்ளி கல்வித்துறை, அறிவியல், தொழில்நுட்பத்துறை ஆதரவுடன் புதுவை அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகம் தெற்கு-11 சார்பில் 13வது சர்வதேச அளவில் அறிவியல் உருவாக்குவோம்  போட்டிக்கான ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகிறது.

இப்போட்டியில் புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகள் மட்டுமே பங்கேற்க முடியும். 7ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கு பெறலாம். ஆய்வுத்திட்டம் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல், வானியல், நிலவியல் ஆகிய பிரிவுகளில் இருக்கலாம். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச்  ஆகிய மொழிகளில் திட்ட குறிப்புகளை அனுப்பலாம். இத்திட்ட குறிப்புகளை வரும் நவ.10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

 இந்த ஆய்வறிக்கைகள் மின் அஞ்சல் மூலம் பெறப்பட்டு, அவை பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றில் சிறந்த 12 ஆய்வுத்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அத்திட்டங்களுக்கு 50 யூரோ ஊக்கத்தொகை வழங்கப்படும். பிறகு அத்திட்டம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, அவை மீண்டும் பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும்.

 இதில் சிறந்த 4 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக

300 யூரோவும், 2ம் பரிசாக 3 ஆய்வறிக்கைகளுக்கு தலா 100 யூரோவும் அளிக்கப்படும். திட்டத்திற்காக விண்ணப்ப படிவத்திற்கு www.psfcerd.org என்ற இணையதளத்தையோ அல்லது

இமெயில் cerdpsf@gmail.com தொடர்பு

கொள்ளவும்.

இத்தகவலை புதுவை அறிவியல் இயக்க செயலாளர் அருண் நாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories: