தாகூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் ஸ்டிரைக்

புதுச்சேரி,  அக். 16:  புதுவை பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தாகூர்  அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

 புதுவை  பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க  வேண்டும், காவலர் பணி தேர்வில் வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் சுதேசி மில்  எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 உப்பளம் தொகுதிக்குழு  சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பூபதி தலைமை  தாங்கினர். தொகுதி செயலாளர் ஹபீஸ் முன்னிலை வகித்தார். நிறுவனர்  சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனிடையே இதே கோரிக்கை  முன்வைத்து தாகூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று மீண்டும்  ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவ- மாணவிகளும்  வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு திரண்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர். புவியரசன், சரண், சூர்யா, கவி, ஹரிம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

  அப்போது புதுச்சேரி பல்கலை.யில் 25 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கோஷமிட்டனர்.  மேலும் தாகூர் கல்லூரி மெயின் நுழைவு வாயில் மூடப்படுவது குறித்தும்  கேள்வி எழுப்பினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  இதையொட்டி கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: