அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் இளைஞர் எழுச்சி நாள்

காரைக்குடி, அக். 16: காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாப்பட்டது. காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்வி குழும தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். பொருளாளர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஹயாசிந்த் சுகந்தி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சேதுராமன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் ரஜனிரத்னமாலா,  அஜய்யுக்தேஷ்,  ஐஸ்வர்யாஅஜய்யுக்தேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

காரைக்குடி, புதுவயல் ஸ்ரீவித்யாகிரி பள்ளி, கலை அறிவியல் கல்லூரியில்  நடந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பள்ளி குழு தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமதுமீரா முன்னிலை வகித்தனர்.  முதல்வர் ஹேமலதாசுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. காரைக்குடி அருகே புதுவயல் கலைமகள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. காரைக்குடி ரகவேந்திரா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கார்த்தி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் சர்வதேச பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சத்யன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சிவக்குமார், நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். முதல்வர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. காரைக்குடி அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடந்த விழாவிற்கு  பள்ளி தாளாளர் காளிச்சரண் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா தலைமை வகித்தார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. காரைக்குடி அருகே சாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அன்பரசுபிரபாகர் தலைமை வகித்தார். ஆசிரியர் ரம்யா நன்றி கூறினார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

காரைக்குடி அருகே விவேகானந்தா பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லூரியில் நடந்த விழாவிற்கு  கல்லூரி தாளாளர் குமாரசாமி தலைமை வகித்தார். செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.  பாலிடெக்னிக் முதல்வர் பாலமுருகன் நன்றி கூறினார். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவராமமூர்த்தி வரவேற்றார். கல்லூரி தாளாளர் சையது தலைமை வகித்தார்.  மரக்கன்றுகள் நடப்பட்டன. காரைக்குடி எஸ்.ஆர் கேட்டரிங் கல்லூரி, நர்சிங், ஓட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் தொழில்பயிற்சி கல்லூரி, ராஜாஸ் ஹெரால்ட் நர்சரி  பள்ளியில் நடந்த விழாவிற்கு கல்விகுழும தாளாளர் அப்துல்சித்திக் தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: