இளையான்குடியில் பேரிடர் மேலாண்மை பேரணி

இளையான்குடி, அக்.16:  சர்வதேச பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு, இளையான்குடியில் வருவாய்த்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாலுகா ஆபீசில் தொடங்கப்பட்ட பேரணிக்கு தாசில்தார் தமிழன் தலைமை தாங்கினார். இளையான்குடி கண்மாய்கரை பகுதி கடந்து பஜார் பகுதிவரை நடைபெற்ற பேரணியில்  மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்(தலையாரி) உட்பட அலுவலக பணியாளர்கள், தன்னார்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பேரணியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்திச் செல்லப்பட்டது. மேலும் புயல், வெள்ளம்,  தீ, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Related Stories: