பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

கடலூர், அக். 16:  கடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நடந்தது. இதில், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நோரில் வழங்கினர். மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மொத்தம் 537 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிகளுக்கு ரூ.7,500 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிளும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பயனாளிக்கு ரூ.6,700 மதிப்பீட்டிலான சிறப்பு சக்கர நாற்காலியும், ஒரு பயனாளிக்கு ரூ.1200 மதிப்பிலான ஊன்று கோல், வருவாய்த்துறை சார்பில் உப்பனாற்றில் விழுந்து இறந்தவரின் தாய் செல்வி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலை உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தாட்கோ சார்பில் துப்புரவு பணியாளர்கள் தொழில் தொடங்குவதற்காக ரூ.45,37,454 மதிப்பீட்டில் 30 நபர்களுக்கு கடனுதவிக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.

சைக்கிளில் சிவப்பு ரிப்லக்டர்

முஷ்ணம், அக். 16:முஷ்ணம்  பகுதியில் விபத்து ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஸ்ரீமுஷ்ணம்  காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் இரவு  நேரங்களில் செல்லும் போது, விபத்து ஏற்படாமல் இருக்க சைக்கிள், மாட்டு வண்டிகளின் பின்புறம் சிவப்பு நிற ரிப்லக்டர் பொருத்தினர். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள்,  பொதுமக்கள், மாட்டுவண்டி ஓட்டுனர்களுக்கு விழிப்

புணர்வை  ஏற்படுத்தினர்.

Related Stories: