மாவட்ட தடகள போட்டி: பரமக்குடி பள்ளி அசத்தல்

பரமக்குடி, அக்.16: பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றிபெற்று மண்டல போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பரமக்குடி அரசு அண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவன் தமிழ்பிரபு 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும் பெற்றார்.

கில்பர்ட் இதயன் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 9ம் வகுப்பு மாணவி கயல்விழி 400, 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும் பெற்றனர். போட்டிகளில் பெற்றிபெற்ற மாணவிகள் மண்டல அளவில் அபிராமம் பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றனர். இவர்களுக்கு பள்ளியின் தலைவர் குமாரசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் மனோகரன், பள்ளி முதல்வர் சோபனாதேவி, துணைமுதல்வர் தனலெட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், கருப்பையன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Related Stories: