வியாபாரிகள் அவதி பள்ளிகளில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

ராமேஸ்வரம், அக்.16:  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆரம்பக்கல்வி பயின்ற ராமேஸ்வரம் வர்த்தகன் தெரு எண்.1 நடுநிலைப்பள்ளியில் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கலாம் படத்திற்கு மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு கலாமின் நண்பர் டாக்டர் விஜயராகவன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ராஜலெட்சுமி வரவேற்றார். எழுத்தாளர் சமுரா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஹமீதா, கிராமக்கல்விக்குழு தலைவர் பாலமுருகன், மேலாண்மைக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் பேசினர். கும்பகோணம் நல்லறம் செய்வோம் சேவைக்குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கேசவராம் கலாம் உருவம் பொறித்த பரீட்சை எழுதும் அட்டைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். எழுத்தாளர் சமுரா பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கினார்.

ஆசிரியர்கள் சார்த்தோ, மாயா, வேல்குமார், ரெஜினாமேரி உட்பட பெற்றோர்கள், கல்விக்குழு, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளித்தலைமை ஆசிரியர் கோமகன் தலைமை தாங்கினார். கிராமத் தலைவர் ரவி, கிராம கல்விக் குழு பொருளாளர் மலைராஜன் முன்னிலை வகித்தனர். விழாவில் பிடிஏ தலைவர் சத்தியா, துணைத்தலைவர் தேவி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரிசயை திவ்யா செய்திருந்தார். தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான் தாமஸ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செய்யது யூசுப் முன்னிலை வகித்தார். ஆசிரியை மரிய லீலா வரவேற்றார். ஆசிரியர்கள் ரவி, சகாயதியரசு, ராமநாதன், பாப்பா, பொன்சாந்தி ஆகியோர் பேசினர். மாலதி நன்றி கூறினார்.

Related Stories: