கரைவலை மீனவர்கள் வலியுறுத்தல் உலக கை கழுவும் தினம்

தொண்டி, அக்.16:  தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளியில் உலக கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் கை கழுவும் விதம் குறித்து எடுத்துரைத்தனர். உலக கை கழுவும் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி தலைமையில் கை கழுவும் விதம் மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.  ஆசிரியை சுபஸ்ரீ மாணவர்களிடம் எவ்வாறு கை கழுவ வேண்டும் என்பதை செய்முறை விளக்கம் செய்து காட்டினார். மேலும் கை கழுவுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் கை கழுவாமல் இருப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்கள் குறித்தும் பேசினார். பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பாம்பன் சின்னப்பாலம் நடுநிலைப்பள்ளியில் தீவு அரிமா சங்கம் சார்பில் கைகழுவும் தினம் கொண்டாடப்பட்டது. மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை செல்லம்மாள் முன்னிலை வகித்தார். ஆசிரியர் லியோன் வரவேற்றார். அரிமா சங்க தலைவர் ஸ்டான்லி, பொருளாளர் பொன்னுசிங்கம், கமலஹாசன் ஆகியோர் பேசினர். ஆசிரியை நிஷா நன்றி தெரிவித்தார். முன்னதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 87வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Related Stories: