மகாபுஷ்கர விழாவையொட்டி அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் கோயிலில் தாமிரபரணிக்கு சுமங்கலிகள் சிறப்பு வழிபாடு

வீரவநல்லூர், அக்.16:  மகாபுஷ்கர விழாவை யொட்டி அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் கோயிலில் தாமிரபரணி அன்னைக்கு சுமங்கலிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் 2007 பேர் பங்கேற்றனர்.

தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி அன்னைக்கு 2007 சுமங்கலி பெண்கள் பூஜை செய்யும் நிகழ்ச்சி அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் திருக்கோயிலில் மாலை 6 மணிக்கு நடந்தது.

2007 சுமங்கலி பெண்கள் பூஜையை மாநில பொது செயலாளர் முத்தப்பா துவக்கி வைத்தார். இதில் வீரவநல்லூர், திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், முக்கூடல், வெள்ளாங்குழி, அரிகேசவநல்லூர், புதுக்குடி, காருகுறிச்சி போன்ற பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பிரசாதமும், சுமங்கலி பெண்கள் பூஜை பொருட்களும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொது செயலாளர் முத்துபாண்டியன், மாவட்ட துணை தலைவர் மயிலாடும்பெருமாள், சேரை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், முத்துராமன், வீரை நகர செயலாளர் முத்துபாண்டி, ராமகிருஷ் ணன், பொன்ராஜ் ஆகி யார் கலந்து கொண்டனர்.

எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளியில் கலாம் பிறந்த நாள் விழா

நெல்லை, அக். 16:  பாவூர்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பிரைமரி பிரிவு மாணவர்கள் கலாமை நினைவு கூறும் வகையில் ராக்கெட், துணைக் கோள்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் ஆகியவற்றை மாடல்களாக செய்து காட்சிப்படுத்தினார். கலாம் போல் உடையணிந்து பேசினர். கலாம் உருவப்படம் வரைந்து அதில் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்தியா 2020ல் வல்லரசு நாடாகுமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இந்த விவாதத்தில் மாணவ, மாணவிகளின் கருத்துக்கள் சிந்திக்க வைத்தது. கலாமிற்கு சலாம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, அப்துல்கலாம் ‘இளைஞர்களின் விடிவெள்ளி’ என்ற தலைப்பில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 ஏற்பாடுகளை பள்ளி அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார், உதவி துணை முதல்வர் இன்பசேகரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: