4.5 டன் குட்காவுடன் லாரி பறிமுதல் வழக்கில் லாரி டிரைவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை

மேச்சேரி,  அக்.12: சேலம் அடுத்த மேச்சேரியில் 4.5 டன் குட்காவுடன் லாரி பறிமுதல்  செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட லாரி டிரைவரை, 2  நாள் காவலில் எடுத்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம்  மாவட்டம் மேச்சேரி அருகே வெள்ளப்பம்பட்டியில், கடந்த 15 நாட்களுக்கு  முன் கர்நாடகா பதிவெண் கொண்ட லாரியில், தடை செய்யப்பட்ட  குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 150  மூட்டையில் இருந்த  ₹50 லட்சம் மதிப்பிலான 4.5 டன் குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தியதில், லாரியை ஓட்டி வந்தது வெள்ளப்பம்பட்டியை  சேர்ந்த சிவக்குமார் என்பதும், லாரியின் உரிமையாளர் கர்நாடகாவை சேர்ந்தவர்  என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த இரண்டு பேரையும்  பிடிக்க தனிப்படை போலீசார் கர்நாடகாவுக்கு விரைந்தனர். ஆனால், அந்த லாரி  உரிமையாளர் தொழிலதிபராகவும், அரசியல் பிரமுகராகவும் இருப்பதால், அவரை கைது  செய்ய முடியாமல் போலீசார் திரும்பி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம், லாரி  டிரைவர் சிவக்குமார், சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து, அவர்  மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அவரை 2 நாள் காவலில் எடுத்து, விசாரணை நடத்த மேச்சேரி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று சிவக்குமாரை காவலில் எடுத்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: