தாரமங்கலத்தில் மாணவிகளை தினமும் கேலி, கிண்டல் செய்யும் வாலிபர்கள்

தாரமங்கலம், அக்.12: தாரமங்கலத்தில் மாணவிகளை தினமும் கேலி, கிண்டல் செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவிகளை, காலை, மாலை நேரத்தில் வாலிபர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள், நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் பேரில்,

பள்ளிக்கு வந்த தாரமங்கலம் ேபாலீசார், பெற்றோர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு, அவர்களை கேலி, கிண்டல் செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மாணவிகள் வந்து செல்லும் பாதையில், போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதுடன், பள்ளி வளாகம் மற்றும் முன்புறம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தினமும் கண்காணிக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து சமாதானமடைந்த பெற்றோர்கள், முற்றுகையை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: