மத்திய அரசின், இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 14 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு ஆண்கள் கையுந்து பந்து மாநில அணிக்கான தேர்வு

காவேரிப்பட்டணம், அக்.12:  மத்திய அரசின், இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 14 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு ஆண்கள் கையுந்து பந்து மாநில அணிக்கான தேர்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வெங்கட்ராஜிலு தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் பவுன்ராஜ், சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர்.

 சிறப்பு விருந்தினராக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி கலந்து கொண்டு தமிழக அணி தேர்வினை துவக்கி வைத்தார். அண்ணாதுரை, ராகவன், சுரேஷ், ஜலேந்திரன், மலர், பொற்கொடி, பீமாபாய் ஆகியோர் தேர்வுகுழு உறுப்பினர்களாக செயல்பட்டனர்.  இதில் தமிழகம் முழுவதிலிருந்து 225 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் சிறப்பாக செயல்பட்ட 15 பேர் மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அடுத்த மாதம் சிக்கிம் மாநிலத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள்.

தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ராஜா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இப்போட்டி நடைபெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: