. கடனுக்காக கொடுத்த காசோலையில் ரூ.5.23 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன அதிபர் மீது வழக்கு

திருச்சி, அக். 12: திருச்சி மாவட்டம் லால்குடி மணக்காலை சேர்ந்தவர் சேட்டு (63). ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த 2014ம் ஆண்டு உறையூர் சின்னசெட்டி தெருவை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கோபால் என்பவரிடம் ரூ.80 ஆயிரம் கடன் பெற்றார். கடனுக்கு ஈடாக இவரின் வங்கி ஏடிஎம் கார்டு மற்றும் காசோலைகளை வழங்கினார். அதன் பின்னர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி உள்ளார். இந்நிலையில் இவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது காசோலை மூலம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.இதுகுறித்து நிதிநிறுவனத்திற்கு வந்து கோபாலிடம் இதுகுறித்து கேட்ட போது, கோபால் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சேட்டுவை மிரட்டியுள்ளனர். இதனால் உறையூர் போலீசார் நேற்று சேட்டு புகார் அளித்தார். இதையடுத்து கோபால், இவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: