நாய் தொல்லை அதிகரிப்பு கரூர் பேருந்து நிலையத்தில் தகவல்பெறும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர், அக.12: தகவல்பெறும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை கலெக்டர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு தகவல் ஆணையம் ஆண்டுதோறும்அக்டோபர் 5ம்தேதி முதல் 12ம்தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட விழாவை கொண்டாடி வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு நலிவுற்ற நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று காலை கரூர் பேருந்துநிலையத்தில் தகவல்பெறும் உரிமைச்சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார்.

பின்னர் பொதுமக்களிடம், தகவல்பெறும் உரிமைச்சட்டம்குறித்து விளக்கி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரத்தை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான குளித்தலை, லாலாப்பேட்டையில் இந்த கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் கரூர் நகராட்சி திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் இந்த கலைநிகழ்ச்சி மாலை நடத்தப்பட்டது. இதில் டிஆர்ஓ சூர்யபிரகாஷ், ஆர்டிஓ சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் தாசில்தார் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: