எரியாத ஹைமாஸ் சரிசெய்யப்பட்டது 2 ஆண்டுகளுக்குபின் விடிவுகாலம்

காரியாபட்டி, அக்.12: காரியாபட்டியில் 2 ஆண்டுகளாக எரியாமல் கிடந்த ஹைமாஸ் விளக்குகள் தினகரன் செய்தி எதிரொலியாக சரி செய்யப்பட்டன.

காரியாபட்டியில் வாகன ஓட்டிகள், மக்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதில் காரியாபட்டி பஸ் நிலையம், முக்குரோடு, செவல்பட்டி முக்கு, கல்குறிச்சி நான்கு வழிச்சாலை, ஆவியூர் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதாகி எரியாமல் இருந்தது.

இதனால் இப்பகுதி மக்கள் இரவில் நடமாட பயந்து வந்தனர். திருட்டு பயமும் அதிகரித்து வந்தது. எனவே உயர்கோபுர மின்விளக்கை உடனே சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பஸ் நிலையம், முக்குரோடு, நான்கு வழிச்சலையில் கல்குறிச்சி, செவல்பட்டி ஆகிய பகுதிகளில் ஹைமாஸ் விளக்கு பழுது நீக்கி எரிய வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: