அழகப்பா பல்கலை தொடர் வகுப்புகள்

காரைக்குடி, அக்.12: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி வாயிலாக நடத்தப்படும் பாடங்களுக்கான தொடர் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என இயக்குநர் ராசாராம் தெரிவித்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்குநர் ராசாராம் தெரிவித்துள்ளதாவது: அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் பி.எல்ஐபி.ஐ.எஸ்சி பாடங்களுக்கான வகுப்புகள் 15ம் தேதி வரை நடக்கிறது.

எம்.எல்ஐபி. ஐ.எஸ்சி வகுப்புகள் 17, 18 ஆகிய தேதிகளில் நூலகத் தகவல் அறிவியல் துறையில் நடக்கவுள்ளது. எம்.ஏ வகுப்புகள் 29 முதல் 31 வரை தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் நடக்கிறது. எம்.பி.ஏ வகுப்புகள் 20, 21 ஆகிய தேதிகளில் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் நடக்கிறது. பி.ஏ (எக்கனாமிக்ஸ்), எம்.ஏ (எக்கனாமிக்ஸ்) வகுப்புகள் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் எக்கனாமிக்ஸ் துறையில் நடக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: